Tuesday, April 26, 2016

ஆயுள் முழுக்க பாழாகாத பேட்டரி கண்டுபிடிப்பு.!!Long life battery

ஆயுள் முழுக்க பாழாகாத பேட்டரி கண்டுபிடிப்பு.!!



ஆயுள் முழுக்க தாங்கும் திறன் கொண்டிருக்கும் பேட்டரியை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்த இந்த பேட்டரி நானோவையர் தொழில்நுட்பம் பயன்படுத்தி 100,000 முறை சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மின்சாரம்

இந்த பேட்டரியை சார்ஜ் செய்யும் போது சிறிதளவு மின்சாரமும் வீணாகது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வு இந்த பேட்டரியில் நானோவையர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நானோவையர்களானது மனித முடியை விட ஆயிரம் மடங்கு மெலிதானதாக இருக்கும்.

சர்ஃபேஸ் ஏரியா

நானோவையர்கள் அதிகளவு சர்ஃபேஸ் ஏரியா கொண்டிருப்பதால் எலெக்ட்ரான்களை சேமித்து டிரான்ஸ்ஃபெர் செய்ய ஏதுவாக இருக்கும்.

சோதனை

இந்த திட்டம் வெற்றி பெற்று இதன் விலை குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்பத்தினை ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்ளெட் போன்ற கருவிகளை சார்ஜ் செய்யவும் பயன்படுத்த முடியும்.

பயன்பாடு 

இந்த தொழில்நுட்பமானது 3 மாதங்களில் சுமார் 200,000 முறை சார்ஜ் செய்யப்பட்டதாகவும், இருப்பினும் பேட்டரியில் எவ்வித கோளாறும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாட்சி

நானோவையர் சார்ந்த எலெக்ட்ரோடுகளை பயன்படுத்தி பேட்டரியின் வாழ்நாளை நீண்ட நேரம் பெற முடியும் என்பதற்கு இந்த தொழில்நுட்பம் சாட்சியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment