இதை செய்தால் போன் வேகமாக இயங்கும்.!!
புதிய ஆண்ட்ராய்ட் போனை வாங்கி சில நாட்களில் டிவைஸ் மெதுவாக செயல் படுவதை அனைவரும் அனுபவித்து இருப்பீர். இதற்கு மிக முக்கிய காரணம் பேக்கிரவுன்டு செயலிகள் தான். சில செயலிகள் உதவியாக இருந்தாலும் அவை போனின் வேகத்தை குறைக்கும். இதில் இருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி கூறுகின்றோம்
பேக்கிரவுன்டு செயல்பாடுகள் என்றால் என்ன? இதற்கு தீர்வு காணும் முன் பேக்கிரவுன்டு செயல்பாடு என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அடிப்படையில் ஆப் டெவலப்பர்கள் பல்வகை பேக்கிரவுன்டு செயல்பாடுகளை நிகழ செயலிகளை வடிவமைக்கின்றனர்.
போனை மெதுவாக செயல்பட வைக்கும் செயலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
இது மிகவும் எளிமையான விடயமே. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செயலிக்கு எவ்வளவு பவர் வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ள முடியும். அதற்கு செட்டிங் சென்று About Phone சென்று Build Number என்பதை developer option செயல் படுத்தப்பட்டுள்ளது என்பது வரும் வரை பல முறை தட்ட வேண்டும். பிறகு about pone இல் இருந்து setting menu சென்று Developer Option > Processor Stats என்பதை தட்டவும். பிறகு ஏதாவது ஒரு நிறுவப்பட்ட செயலியை தேர்வு செய்து அவை எவ்வளவு மெமரி பயன்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கவும்.குறிப்பு: கஸ்டம் ரோம்களை பொருத்து இந்த செயல் மாறுபடும். எடுத்துக்காட்டாக, MIUI 7 இல் நீங்கள் MIUI வர்ஷனை பலமுறை தட்டி Developer Optionsஐ செயல் படுத்த வேண்டும்.
எந்த செயலி மெமரியை அதிக அளவிற்கு இழுக்கின்றது? எந்த ஆப் அதிக அளவில் மெமரியை இழுக்கின்றது என்பதற்கான எந்த கட்டாயமும் கிடையாது.
சமூக வலைத்தளங்களான முகநூல், மெசேன்ஜர், நிறுவப்பட்ட கேம், கூகுள் ப்ளே, மியூசிக் போன்றவை அடங்கும். Guardian state வழங்கிய சமீபத்திய ஆய்வு முகநூல் ஆப்ஸ் 20சதவிகித பேட்டரியை இழுக்கின்றது என்று கூறுகின்றது.
இந்த ஆப்கள் பின்புலத்தின் ஓடுவதை நிறுத்துவது எப்படி? நீங்கள் இந்த ஆப்ஸ்களை நிறுத்த வேண்டும் என்று எண்ணினால் இதை பின்பற்றுங்கள். Go to Settings > Apps/Application Manager > Installed Apps/Downloaded என்பதை பின்பற்றி நீங்கள் செயல் இழக்கம் செய்ய வேண்டிய ஆப் மீது தட்டவும். எடுத்துக்காட்டாக Amazon வேண்டாம் என்று நினைத்தால், Force stop என்பதை தட்டவும். இதற்கு பதில் நிறுவியதை மீண்டும் நிறுத்த முடியும். அதாவது Uninstall செய்யவும் முடியும்.
எப்படி இருந்தாலும், சில நிறுவனங்களின் செயலிகளில் uninstall அப்ஷன் கொடுக்கப்படுவதில்லை. அவற்றுக்கு disable option மீது தட்டவும். சில நிறுவன ஆப்களில் disable செய்யும் ஆப்ஷனும் இருப்பதில்லை. ஆகையால் ஒரே தேர்வு Force stopஐ தேர்வு செய்வதுதான்.
No comments:
Post a Comment